ஐ.பி.எல்.லில் குறைந்த ரன் வித்தியாசத்தில் 5 முறை வெற்றியை தவற விட்ட சென்னை அணி

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. எனினும், போட்டியில் 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 211 ரன்களையே எடுத்தது. இதனால், 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

அந்த அணியை சேர்ந்த ஷெப்பர்டு ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர், 14 பந்துகளில் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி, ஆட்டத்தின் போக்கை வெற்றியை நோக்கி திருப்பினார். இந்த ஐ.பி.எல். போட்டிகளில் குறைந்த ரன் வித்தியாசத்தில் சென்னை அணி 5 முறை வெற்றியை தவற விட்டுள்ளது.

இவற்றில், 2019-ம் ஆண்டில் பெங்களூரு அணிக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும், அதே 2019-ம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெறாமல் போனது.

2025-ம் ஆண்டில் பெங்களூரு அணிக்கு எதிராக 2 ரன்கள் வித்தியாசத்திலும், 2023-ம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக 4 ரரன்கள் வித்தியாசத்திலும் வெற்றியை தவற விட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.