சந்தானம் நடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருக்கிறார்.

இத்திரைப்படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.
ஆர்யா பேசுகையில், “படத்துக்காக சொன்ன ஐடியா ரொம்பவே புதுசா இருந்தது. இந்தப் படத்தோட முழுக் கதை பெருசா வந்தது.
பட்ஜெட்டாகவும் பெரிய படமாக வந்திருக்கு. அப்புறம் படத்துக்குள்ள நிகாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வந்தாங்க.
அவங்ககிட்ட ‘சந்தானதுக்கு நிறைய பிரச்னை இருக்கு. அதை நீங்க தீர்த்து வச்சா நிம்மதியாக வேலை பார்ப்பான்’னு சொன்னேன்.
அதை கேட்டுட்டு ‘படத்தோட பட்ஜெட்டைவிட சந்தானத்தோட பிரச்னை பெருசா இருக்கு’னு அவங்க சொன்னாங்க.

நட்புக்காக
படம் ரொம்பவே அழகாக வந்திருக்கு. சினிமாவை தாண்டி இந்தப் படத்துல நட்புக்காக பலர் பல விஷயங்கள் பண்ணியிருக்காங்க.
கெளதம் மேனன் சாரும், செல்வராகவன் சாரும் நட்புக்காக இந்தப் படத்தை பண்ணிக் கொடுத்தாங்க.
அவங்களோட இமேஜ் மற்றும் கேரக்டரை சரியாக யூஸ் பண்ணியிருக்காங்க. இந்த நிகழ்வுக்கு வந்த சிம்பு ப்ரதருக்கு நன்றி.” என்றார்.