MS Dhoni Warning : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதனால் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. அந்த போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, சிரித்துக் கொண்டே சிஎஸ்கே பிளேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார். “சிஎஸ்கே பிளேயர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஆனால் பிளேயர்களும் எல்லோரும் 200-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட்டைத் தேடுகிறார்கள். அதை செய்தீர்கள் என்றால் நிலையான ஆட்டத்தை ஆடுவது கடினம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தோனி “எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது அந்த அழுத்தத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிதானமாக இருப்பது எப்படி என்பதை மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இதுவே முக்கியம். ஒவ்வொரு போட்டியையும் நீங்கள் படிக்க வேண்டும். இதுவே அனைத்து இளைஞர்களுக்கும் எனது அறிவுரையாக இருக்கும்.” என்றும் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியைப் பற்றி தோனி பேசும்போது, சிஎஸ்கே அணி தொடக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு கூடுதல் விக்கெட்டுகளை இழந்ததாகக் கூறினார். “நாங்கள் ஆரம்பத்தில் ஸ்கோர் போர்டில் மிகவும் நன்றாக இருந்தோம். ஆனால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சீக்கிரம் விழுந்துவிட்டது. அது மிடில் மற்றும் பின் வரிசையில் அழுத்தத்தை ஏற்படுத்தியது. இப்படி விக்கெட்டை விட்டால் நீங்கள் 20 ஓவர்களை பேட்டிங் செய்யாமல் கூட போகலாம்.
“பிரெவிஸின் இன்னிங்ஸ் மிகவும் அருமையாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், அவர் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார், ரன்-ரேட் நன்றாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். ஆனால் தொடக்கத்தில் 1-2 கூடுதல் விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குக் பின்னடைவு. காம்போஜ் நன்றாக செயல்படுகிறார். பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் வீசுவது கடினம். அவர் சிறப்பாகச் செய்துள்ளார்” என தோனி கூறினார்.
அதேநேரத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளையும் விளையாடி முடித்தது. 10 தோல்விகள், 4 வெற்றிகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரை முடித்திருகிறது. தங்கள் அணி தவறுகளைச் செய்ததாகவும், இருப்பினும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்றும் சாம்சன் ஒப்புக்கொண்டார். சாம்சன் பேசும்போது “நிச்சயமாக நாங்கள் சிறப்பாகச் செய்திருக்க முடியும். அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. நாங்கள் சில தவறுகளைச் செய்துள்ளோம். அடுத்த சீசனில் நாம் சிறந்த மனநிலையுடன் திரும்பி வருவோம்.” என தெரிவித்தார்.
மேலும் படிங்க: எங்களுக்கு அந்த ஒரு வீரர் வேண்டும் – தோனி சொன்னது யாரை தெரியுமா?
மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!