ஜூன் மாதம் வழக்கத்தை விட அதிகளவு மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய கணிப்பு

புதுடெல்லி: ஜூன் மாதம் பருவமழை வலுக்கும் காலத்தில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக்கான முன்கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் மாற்றியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்பின்படி, நீண்ட கால சராசரி மழையளவு 106 சதவீதம் பெய்யும் என்றும், அதில் 4 சதவீதம் வரை கூடுதல், குறைவாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.

இது வானிலை ஆய்வு மையத்தின் முந்தைய கணிப்பான 105 சதவீதத்தை விட 1 சதவீதம் அதிகம். மேலும், வழக்கமான மழையளவை விட அதிகம் என்ற வகையில் வருகிறது. சராசரி மழையளவான 104 சதவீதத்தை மழையளவுத் தாண்டும்போது வழக்கத்தை விட அதிகமான மழை என்று அழைக்கப்படும்.

வரும் ஜூன் மாதம் பருவமழை வலுவாக தொடங்க இருக்கிறது. மழைப்பொழிவு வழக்கத்தை விட 108 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடக்க நிலை அதிக அளவு மழையுடன், நாட்டின் பெரும் பகுதிகளில் வழக்கத்தை விட குளிராக இருக்கும். என்றாலும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இந்த பருவமழை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்பம் நிலவும்.

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, மத்திய மற்றும் தென்பகுதியில் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்யக்கூடும், நீண்ட கால சராசரியை விட 106 சதவீதம் அதிக மழை பெய்யக்கூடும். இதற்கு நேர்மாறாக வடகிழக்கு இந்தியாவில் பருவமழை காலத்தில் சரசாரியைவிட மழை குறைவாக இருக்கும்.

தேசிய தலைநகர் டெல்லி உட்பட வடமேற்கு இந்தியாவுக்கான முன்னறிவிப்பின்படி, நீண்ட கால சராசரியான 92-100 சதவீதத்துக்குள் மழையளவு இருக்கும். மற்ற பகுதிகளில் இந்த பருவமழை காலத்தில் வழக்கமான அல்லது வழக்கத்துக்கு அதிகமான அளவு மழை பெய்யக்கூடும்.

மும்பையில் பெய்த கனமழை காரணமாக சாலைகள், நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திருத்தப்பட்ட வானிலை முன்கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின்பு, முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மும்பையில் 107 ஆண்டுகளுக்கு பின்பு மே மாதத்தில் வரலாறு காணாத மழையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.