லக்னோ,
உத்தரபிரதேசம் மாநிலம் பக்ராயிச் அருகே முனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆலம் ஆரா (45 வயது). திருமணமான இவருக்கு இஸ்மாயில் (10 வயது) என்ற மகன் இருந்தான். நேற்று இரவு இஸ்மாயில் வீட்டில் தரையில் வைக்கப்பட்டிருந்த மின்விசிறியை இயக்குவதற்கான சுவிட்சை போட்டுள்ளான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அவனை காப்பாற்ற முயன்ற தாய் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கியதில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :