ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?

துபாய்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 100 சதவீத புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன.

இதனையடுத்து தலா 33.33. சதவீத புள்ளிகளுடன் வங்காளதேசம் 3-வது இடத்திலும், இலங்கை 4-வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்தியா இன்னும் புள்ளி கணக்கை தொடங்காமல் 5-வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி கண்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்னும் புள்ளி கணக்கை தொடங்காமல் 6-வது இடத்தில் உள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்கா ஆகியவை 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. இதனால் அந்த அணிகளுக்கு இன்னும் புள்ளிகள் கொடுக்கப்படவில்லை.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.