பட்ஜெட் விலையில் ஒப்போ K13x ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ K13x 5ஜி ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுகமானது. பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் ‘K’ சீரிஸ் வரிசையில் ‘K13x’ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஒப்போ K13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ K13x சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ள பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 6,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் ஸ்பீடு
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 4ஜிபி / 6ஜிபி / 8ஜிபி ரெட்ம
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.11,999 முதல் விற்பனையாகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.