மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த கடும் எதிர்ப்பை மீறி கேரள பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி

திருவனந்தபுரம்: கேரளா​வில் பள்ளி மாணவ, மாண​வியரின் உடல்​நலன், மனநலனை மேம்​படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதற்கு மத அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. ஜும்பா என்​பது நடனத்தை உள்​ளடக்​கிய உடற்பயிற்சி ஆகும். கடந்த 2001-ம் ஆண்​டில் கொலம்​பிய நடன கலைஞர் பீட்டோ பெரெஸ், ஜும்பா நடனத்தை உரு​வாக்​கி​னார். தற்​போது உலகம் முழு​வதும் 180-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் இந்த நடனம் பிரபல​மாக இருக்​கிறது.

கேரளா​வில் அரசு மற்​றும் தனி​யார் பள்ளி மாணவ, மாண​விருக்கு ஜும்பா நடன பயிற்சி வழங்​கும் திட்​டம் நடப்பு கல்​வி​யாண்​டில் அறி​முகம் செய்​யப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் மாணவ, மாணவியரின் உடல் நலன், மன நலன் மேம்​படும். போதை பொருள் பழக்​கத்​துக்கு மாணவர்​கள் அடிமை​யா​வது தடுக்​கப்​படும் என்று கேரள கல்​வித் துறை விளக்​கம் அளித்து உள்​ளது. ஆனால் பல்​வேறு மத அமைப்​பு​கள் ஜும்பா நடன பயிற்சி திட்​டத்​துக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

முஸ்​லிம் மாணவர்​கள் கூட்​டமைப்​பின் தலை​வர் நவாஸ் கூறும்​போது, “ஜும்பா நடனம் அநாகரி​மாக இருக்​கிறது. இந்த திட்​டத்தை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார். கேரளாவை சேர்ந்த எஸ்​ஒய்​எஸ், வோர்ல்டு இஸ்​லாமிக் கூட்​டமைப்பு உள்​ளிட்ட பல்​வேறு அமைப்​பு​களும் ஜும்பா நடன பயிற்சி திட்​டத்​துக்கு கடு்ம் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.

இதுகுறித்து கேரள பள்ளி கல்​வித் துறை அமைச்​சர் சிவன்​குட்டி கூறிய​தாவது: போதை பொருள் ஒழிப்பு திட்​டத்​தின் ஒரு பகுதியாக பள்​ளி​களில் ஜும்பா நடன பயிற்சி வழங்​கும் திட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதுதொடர்​பாக சில அமைப்​பு​கள் ஆட்​சேபம் தெரி​வித்​துள்​ளன.

அந்த அமைப்​பு​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்த நாங்​கள் தயா​ராக இருக்​கிறோம். யோகா, ஏரோபிக்​ஸ், ஜும்பா உள்​ளிட்​டவை உடல்​நலனை பேணும் பயிற்​சிகள் ஆகும். ஜும்பா நடன பயிற்​சி​யின்​போது மாணவ, மாண​வியருக்கு சிறப்பு உடைகள் பரிந்​துரை செய்​யப்​பட​வில்​லை. பள்ளி சீருடை​யிலேயே அவர்​களுக்கு பயிற்​சிகள் வழங்​கப்​படு​கின்​றன.

மிக எளி​தான உடற்​ப​யிற்​சிகள் மட்​டுமே கற்று கொடுக்​கப்​படு​கிறது. சிலர் உள்​நோக்​கத்​துடன் ஜும்பா நடன பயிற்சி திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். இந்த திட்​டத்தை வாபஸ் பெறும் பேச்​சுக்கே இடமில்​லை. பள்ளி மாணவ, மாண​வியருக்கு தொடர்ந்து ஜும்பா நடன பயிற்சி வழங்​கப்​படும். இவ்​வாறு அமைச்​சர் சிவன் குட்டி தெரி​வித்​தார்.

கேரள உயர் கல்​வித் துறை அமைச்​சர் ஆர்​.பிந்து கூறிய​தாவது: பிற்​போக்​கான எண்​ணம் கொண்​ட​வர்​கள் ஜும்பா நடன பயிற்​சிக்கு எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். இன்​றைய காலத்​தில் விண்​வெளிக்கு பெண்​கள் பயணம் மேற்​கொள்​கின்​றனர். மாணவி​களை மையப்​படுத்தி ஜும்பா நடனத்​துக்கு எதிர்ப்பை தெரி​விப்​பதை ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இவ்​வாறு அமைச்​சர் ஆர். பிந்து தெரி​வித்​தார்.

கேரள இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் ராகுல் மம்​கூத்​த​தில் கூறும்​போது, “பள்​ளி​களில் ஜும்பா நடன பயிற்சி அளிக்​கப்​படு​வதை காங்​கிரஸ் வரவேற்​கிறது. இது குழந்​தைகளின் உடல்​நலன், மனநலன் சார்ந்த பயிற்சி ஆகும். பள்​ளிப் பரு​வத்​திலேயே அவர்​களுக்கு உடற்​ப​யிற்​சி​யின் அவசி​யத்தை கற்​றுக் கொடுக்க வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.