கர்நாடக மாநிலத்தில் பருவமழை முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை ஜூன் மாதமே அதன் முழு கொள்ளளவை எட்டியது. தொடர் மழை காரணமாக அணையில் இருந்து உபரி நீர் கடந்த சில தினங்களாக திறக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டின் மேட்டூர் அணையும் நிரம்பியது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், கே.ஆர்.எஸ். அணையை விவசாய பாசனத்திற்காக கர்நாடக […]
