தெலுங்கு மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மாற்றம்: கட்சி எம்எல்ஏ ராஜினாமா

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களி​லும் பாஜக மாநில தலைவர்​கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பார​திய ஜனதா கட்​சி​யின் ஆந்​திர மாநில தலை​வ​ராக புரந்​தேஸ்​வரி​யும், தெலங்​கானா மாநில பாஜக தலை​வ​ராக மத்​திய அமைச்​சர் கிஷண் ரெட்​டி​யும் பதவி வகித்து வந்​தனர். இவர்​களது பதவி காலம் முடிவடைந்​த​தால், இந்த இரு மாநிலத்​தி​லும் கட்​சியை மேலும் பலப்​படுத்த புதிய தலை​வர்​களை பாஜக நியமனம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி, நேற்று ஆந்​திரத்​தின் புதிய பாஜக தலை​வர் பதவிக்கு முன்​னாள் மேலவை உறுப்​பின​ரான பிவிஎன் மாதவ் விண்​ணப்ப மனு தாக்​கல் செய்​தார். இவர் தற்​போது ஆந்​திர மாநில பாஜக பொது செய​லா​ள​ராக உள்​ளார். இவரது தந்தை மறைந்த சலபதி ராவ் 2 முறை மேலவை உறுப்​பின​ராக பதவி வகித்​தவர் என்​பது குறிப்​பிட தக்​கது.

இதே​போன்று தெலங்​கானா மாநில புதிய பாஜக தலை​வ​ராக மேலவை உறுப்​பினர் ராமசந்​திர ராவை கட்சி மேலிடம் முடிவு செய்​துள்​ள​தாக தகவல்​கள் வந்​துள்​ளன. இவர் நேற்று மதி​யம் தலை​வர் பதவிக்​காக விண்​ணப்ப மனுவை தாக்​கல் செய்​தார். இவர் விரை​வில் அடுத்த தலை​வ​ராக நியமனம் செய்​யப்பட உள்​ளார் என்​பது குறிப்​பிடத்தக்​கது.

இந்​நிலை​யில், தெலங்​கானா பாஜக எம்​எல்​ஏ​வான ராஜாசிங் நேற்று பாஜக​விற்கு ராஜி​னாமா செய்​தார். இது குறித்துராஜாசிங் கூறுகையில், ‘‘நான் பாஜக​வின் எம்எல்​ஏவாக இங்கு உள்​ளேன். கட்​சிக்​காக பாடு​பட்டு வரு​கிறேன். மாநில பாஜக தலை​வ​ராக பதவி வகிக்க எனக்கு முழு தகு​தி​யும் உள்​ளது. இதற்​காக நான் விண்​ணப்​பிக்க விரும்​பினேன். ஆனால் என்னை பாஜக​வினர் தடுத்து விட்​டனர். ஆதலால் நான் பாஜக​விலிருந்து வில​கு​வ​தாக மாநில கட்சி தலை​வரும் மத்​திய அமைச்​சரு​மான கிஷண்​ ரெட்​டிக்​கு கடிதம்​ எழு​தி உள்​ளேன்​’’ என கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.