தெலுங்கானா மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நடந்த மோதலைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ராஜினாமா செய்துள்ளார். கோஷாமஹால் எம்எல்ஏ ராஜா சிங்-கின் இந்த அறிவிப்பு தெலுங்கானா பாஜக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இன்று காலை நடைபெற்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராஜா சிங் கட்சியின் தேசிய தலைவர்களால் தடுக்கப்பட்டதாகவும் மாநில தலைவராக ராகவேந்திர ராவ் அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கட்சித் தலைவரை தேர்தல் மூலம் […]
