இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது. அப்போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று (ஜூலை 2) இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்ரு பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் தொடர்க்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் களம் இறங்கினர். ஆனால் ராகுல் 2 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜெய்ஸ்வாலுடன் கருண் நாயார் கைக்கோர்த்தார். ஆனால் கருண் நாயாரும் களத்தில் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இச்சூழலில் தொடக்க முதலே அதிரடி காட்டி வந்த ஜெய்ஸ்வால், அரை சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா (SENA) நாடுகளில் அதிக அரை சதம் அடித்த இந்திய தொடக்க வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார். ரோகித் சர்மா 4 முறை அரைசதம் அடித்த நிலையில், ஜெய்ஸ்வால் 5 முறை அரை சதம் அடித்துள்ளார். இதில் இப்போட்டியும் அடங்கும்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கி சென்றார். 107 பந்துகளில் 87 ரன்கள் அடித்திருந்தார். அவர் சதம் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் கூடுதலாக 10 ரன்கள் அடித்திருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார். தற்போது, ஜெய்ஸ்வால் 39 இன்னிங்ஸில் 1990 ரன்கள் அடித்திருக்கிறார். முன்னதாக ராகுல் டிராவிட் 40 இன்னிங்ஸில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்தது சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய கேப்டன்கள் – சுவாரஸ்ய தகவல்..!!
மேலும் படிங்க: CSK-க்கு சஞ்சு சாம்சன் வேண்டவே வேண்டாம்… 3 முக்கிய காரணங்கள் இதோ!