அமெரிக்க அதிபர் ட்ரம்பை மீண்டும் சீண்டிய எலான் மஸ்க்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழில​திபர் எலான் மஸ்க் மீண்​டும் சீண்​டி​யுள்​ளார். கைது விவ​காரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலை​தளத்​தில் பதி​விட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார் மஸ்க்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் தீவிர ஆதர​வாள​ராக இருந்​தவர் தொழில​திபர் எலான் மஸ்க். கடந்த ஜனவரி​யில் ட்ரம்ப் அமெரிக்க அதிப​ராக பொறுப்​பேற்​றதும் எலான் மஸ்க்கை அரசின் செயல்​திறன் துறை​யின் தலை​வ​ராக நியமித்​தார். அரசின் தேவையற்ற செல​வு​களை குறைப்​பதே இத்​துறை​யின் நோக்​கம் என்​றும் அப்​போது ட்ரம்ப் அறி​வித்​தார்.

இந்​நிலை​யில், அதிபர் ட்ரம்ப் பெரிய அழகிய வரி என்ற மசோ​தாவை அறி​முகம் செய்​தார். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, அரசின் செயல்​திறன் துறை தலை​வர் பதவியை எலான் மஸ்க் ராஜி​னாமா செய்​தார். தற்​போது இந்த மசோ​தா​வும் அமெரிக்க நாடாளு​மன்​றத்​தில் நிறைவேறி​யுள்​ளது. அதிபர் ட்ரம்​புக்​கும், எலான் மஸ்​குக்​கும் மோதல் முற்​றிய நிலை​யில் ட்ரம்​புக்கு எதி​ராக புதி​தாக கட்சி ஒன்​றை​யும் நேற்று முன்​தினம் எலான் மஸ்க் தொடங்​கி​யுள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மீண்​டும் சீண்​டி​யுள்​ளார் எலான் மஸ்க். பாலியல் வன்​கொடுமை வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்டு அமெரிக்க சிறை​யில் மர்​ம​மான முறை​யில் உயிரிழந்த குற்​ற​வாளி​யான ஜெப்ரி எப்​ஸ்​டீன் தொடர்​பான ஆவணங்​களில் அதிபர் ட்ரம்பின் பெயர் உள்​ள​தாக எலான் மஸ்க் கூறி​யுள்​ளார். அதிப​ராக இருப்​ப​தால் ட்ரம்ப் பெயர் அந்த ஆவணங்​களில் இருந்து வெளி​யா​காமல் உள்​ளது என்​றும் கடந்த மாதம் தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று எக்ஸ் பதி​வில் மஸ்க் கூறும்​போது, “இப்​போது என்ன நேரம். அங்கு பாருங்​கள். இது​வரை யாரும் கைது செய்​யப்​பட​வில்​லை. நேரம் மீண்​டும் 12 மணி​யாகி​விட்​டது. கைது விவ​காரம்’’ என்று கூறி​யுள்​ளார். மேலும் அவர் வெளி​யிட்​டுள்ள படத்​தில் அதி​காரப்​பூர்வ ஜெப்ரி எப்​ஸ்​டீன் கைது நேரம்: 0 0 0 0 என்று கூறப்​பட்​டுள்​ளது. எலான் மஸ்க்​கின் இந்த பதிவு அமெரிக்​கா முழு​வதும்​ அதிர்​வலைகளை எழுப்​பியுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.