சீனாவின் புகழ்பாடுகிறார் ராகுல்: பாஜக மூத்த தலைவர் விமர்சனம்

புதுடெல்லி: பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சீன ராணுவ தொழில்​நுட்​பத்​தின் புகழ் பாடு​வதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாடிக்​கை​யாக வைத்​துள்​ளார்.

நாடாளு​மன்​றத்​துக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் சீன ராணுவ தொழில்​நுட்​பம், ஆயுதங்​களுக்கு ஆதர​வாக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வரு​கிறார். கடந்த 2021-ம் ஆண்டு மக்​களவை கூட்​டத்​தின்​போது, லடாக்​கில் சீனா​வின் மோதல் போக்கை ஆதரிக்​கும் வகையில் ராகுல் பேசி​னார். சீன மாடல் கண்​காணிப்பு ட்ரோன்​களை நாம் ஏன் பயன்​படுத்​தக்​கூ​டாது என்று அவர் கேள்​வி​யும் எழுப்பி​னார்.

கடந்த 2023-ம் ஆண்​டில் பிரிட்​டிஷ் தலைநகர் லண்​டனில் நடை​பெற்ற கலந்​துரை​யாடலில் ராகுல் காந்தி பங்​கேற்​றார். அப்​போது, தொழில்​நுட்ப பந்​த​யத்​தில் சீனா வெற்றி பெற்று வரு​கிறது. ராணுவ தொழில்​நுட்​பங்​கள், ராணுவ பயன்​பாட்​டுக்​கான ட்ரோன் தொழில்​நுட்​பங்​களில் சீனா முன்​னோடி​யாக இருக்​கிறது. அந்த நாட்​டிடம் இருந்து இந்​தியா பாடம் கற்​றுக் கொள்ள வேண்​டும் என்று ராகுல் அறி​வுரை கூறி​னார்.

கடந்த 2022-ல் பாது​காப்​புத் துறை நிபுணர்​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். அப்​போது சீன மாடல் ட்ரோன்​களை இந்​திய ராணுவம் கண்​காணிப்பு பணி​களுக்கு பயன்​படுத்த வேண்​டும் என்று அவர் அறி​வுரை கூறி​னார். இந்​திய பாது​காப்​புப் படைகள் குறித்து எதிர்​மறை​யாக பேசுவதும், எதிரி​களின் தொழில்​நுட்​பங்​களை போற்​றிப் புகழ்​வதும் ராகுல் காந்​தி​யின் கொள்​கை​யாக இருந்து வரு​கிறது. இது​தான் தேசப்​பற்​றா? இவ்​வாறு அவர் கேள்​வி எழுப்​பி உள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.