சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவரான திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் என அவரது கட்சியான மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் […]
