பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே இரண்டு பேர் கடந்த ஆண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து ஒரு சில மாதங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக தனது வீட்டை புதுப்பித்த சல்மான் கான், தனது பிறந்தநாள் மற்றும் ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது ரசிகர்களைப் பார்க்க வந்து நிற்கும் பால்கனியின் கண்ணாடிகளை குண்டுதுளைக்காத வகையில் மாற்றியமைத்துள்ளார். […]
