சென்னை: மறைந்த மு.க.முத்துவின் உடல், அவர் பிறந்த இடமான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை (சனிக்கிழமை) காலமானார். வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க. முத்து கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை […]
