Rishabh Pant : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்து தேவைப்பட்டால் பேட்டிங் செய்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மான்செஸ்ட்ர் ஓல்ட்டிராஃபோர்டு மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. ஓப்பனிங் இறங்கிய ஜெய்ஷ்வால், கேஎல் ராகுல் இருவரும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல ஸ்கோரை எடுத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட் அணியின் ஸ்கோர் 94 ரன்கள் இருந்தபோது விழுந்தது.
46 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த கேஎல் ராகுல் கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் கேட்ச் என்ற முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஜெய்ஷ்வால் 58 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் நல்ல பார்ட்னர்ஷிப் தேவை என்ற நிலை இந்திய அணிக்கு எழுந்தது. அப்போது களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாற்றத்தில் சிக்கியது. இருப்பினும், சாய்சுதர்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்தார். முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சுதர்சன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிடில் வரிசையில் ரிஷப் பந்த் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால், அவருக்கு பந்து காலில் பட்டு காயம் ஏற்பட்டது. ஸ்கேனில் பெரிய காயம் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம், பிசிசிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரிஷப் பந்த் காயமடைந்திருப்பதால், அவர் இப்போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என தெரிவித்துள்ளது. ரிஷப் பந்துக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் செய்வார் என அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் ரிஷப் பந்த் பேட்டிங் மட்டும் செய்வார் என பிசிசிஐ அறிவித்தது.
July 24, 2025
அதன்படி, மீண்டும் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தார் ரிஷப் பந்த். காலில் ஏற்பட்ட காயத்துடனேயே விளையாடினார். இந்திய அணியைப் பொறுத்தவரை அவருடைய பேட்டிங் மிக அவசியமானது. ஏனென்றால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் கட்டாயம் எடுத்தாக வேண்டும். அப்போது தான் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கட்டாயம் இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழலில் மான்செஸ்டர் போட்டியில் இந்தியா விளையாடுவதால், ரிஷப் பந்த் காயத்துடன் பேட்டிங் செய்ய இந்திய அணி நிர்வாகம் அனுமதித்துள்ளது. லேட்டஸ்ட் அப்டேட்டின்படி இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது.
மேலும் படிக்க | இனி இந்த பிளேயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது! முடிவுரை எழுதிய கவுதம் கம்பீர்
மேலும் படிக்க | இந்த 10 இந்திய வீரர்களை விட… லியம் டாவ்சன் அதிக சதங்களை அடித்திருக்கிறாராம் – எதில் தெரியுமா?
மேலும் படிக்க | இந்திய அணிக்கு ஆப்பு உறுதி… டெஸ்டில் 5 நாள்களும் மழைக்கு வாய்ப்பு – இதுகளும் சதி பன்னுதே!