இனி பும்ரா டெஸ்ட்டில் விளையாடா மாட்டாரா? பிசிசிஐ முடிவால் வந்த சிக்கல்!

தற்போதுள்ள இந்திய அணியில் மிகவும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரது பங்களிப்பு என்பது இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் பும்ராவால் டெஸ்ட் போன்ற பெரிய தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் உள்ளது. அதாவது பும்ராவின் பந்து வீச்சு திறனுக்கு அவரது உடல் ஒத்துழைப்பதில்லை. இதன் காரணமாக அவரால் ஒரு டெஸ்ட் போட்டி விளையாட முடிந்தால், அடுத்த போட்டி விளையாட முடியவில்லை. அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. 

முன்பை போல் பும்ராவால் செயல்பட முடியவில்லை

Ind vs Eng: தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பின் இரண்டாவது போட்டியின் போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், 5வது டெஸ்ட் போட்டியின்போது மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜஸ்பிரித் பும்ரா, முன்பை போல் வேகமாகவும் பந்து வீசுவதில்லை. முன்பெல்லாம் அவர் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சராசரியாக வீசி வந்தார். ஆனால் தற்போது 100 பந்துகள் வீசினால், அதில் ஒருசில பந்துகள் மட்டுமே 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார். 

ஐஸ்பிரித் பும்ராவால் ஒரு தொடரில் மூன்று போட்டி மட்டும் தான் விளையாட முடியும் என்ற சூழல் இருப்பதால், இந்திய அணியின் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் பலர் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பும்ராவால் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதுதான். 

கட்டுப்பாட்டை விதிக்கும் பிசிசிஐ 

இந்த நிலையில், பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பிசிசிஐ புதிய கொள்கையை கொண்டுவர ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட ஐஸ்பிரித் பும்ரா தயாராக இருந்தால் மட்டுமே அவரை அணிக்கு தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஒருவேளை அவரால் முடியாது என்றால், டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. பும்ராவுக்கு இந்த கட்டுப்பாட்டை பிசிசிஐ விதிக்க அலோசித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சமீபமாக பல முறை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில், பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியில் காயம் அடைந்த அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதை தவறவிட்டார். பின்னர் ஐபிஎல் தொடர் தொடங்கி இரண்டு வாரங்கள் கழித்தே அவர் மீண்டும் களத்திற்கு திரும்பினார். பும்ரா மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலுமே மிகவும் முக்கியமான தவிர்க்கமுடியாத ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் பும்ரா விரும்பினாலும், இனி அவரால், அனைத்து வித கிரிக்கெட்டிலும் விளையாடுவது சந்தேகமான விஷயமே. 

மேலும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைகிறாரா சாம்சன்? முதல் ரியாக்ஷன்

மேலும் படிங்க: இந்த 3 வீரர்களின் வாய்ப்பை தட்டிப்பறித்த கவுதம் கம்பீர்! இனி அணியில் இடம் பெறுவார்களா?

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.