துபாய்,
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி ஆட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தாலும் போட்டி அரங்கேறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த போட்டித் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.