Ind vs Eng: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதில் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணியும் ஒரு போட்டியை இந்திய அணியும் வென்றுள்ளது. மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் நிறைவடைந்தது. இந்திய அணி வென்ற அந்த இரண்டாவது போட்டியில் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டியில் முக்கிய பந்து வீச்சாளர்களாக இருந்த சிராஜ், ஆகாஷ் தீப் சிறப்பாக பந்து வீச்சினர். இரண்டு இன்னிங்ஸிலும் சிராஜ் 7 விக்கெட்களையும் ஆகாஷ் தீப் 10 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். அதேபோல், தற்போது ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட் போட்டியிலும் பும்ரா இல்லாத பட்சத்தில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் பந்து வீச்சாளர் சிராஜிடம், எப்படி பும்ரா இல்லாத போட்டிகளில் மட்டும் சிறப்பாக பந்து வீசுகின்றீர்கள் என கேட்டார்.
அதற்கு பதில் கூறிய சிராஜ், பொதுவாக எனக்கு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மிகவும் பிடிக்கும். பும்ரா இல்லாதது குறைதான். நான் அவரை ரொம்ப மிஸ் பண்ணறேன். அவர் அணியின் சீனியர் வீரர். அவர் இல்லாத போது எனக்கு கூறுதல் பொறுப்பு இருக்கின்றது. அதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு செயல்படுகிறேன். அதேசமயம் பொறுப்புகள் அதிகரிக்கும்போது, எனக்கு நெருக்கடிகள் ஏற்படுவதில்லை. எப்போதுமே என்னுடைய திட்டத்தை மிகவும் எளிதாக வைத்துக்கொள்வேன். பும்ரா இருந்தால், அவரே எந்தெந்த வீரருக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார். அவர் இல்லாதபோது அதை நாங்கள் செய்ய வேண்டும் எனக் கூறுவார் என சிராஜ் கூறினார்.
தொடர்ந்து மற்ற வீரர்கள் தடுமாறும்போது, நீங்கள் மட்டும் எப்படி 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறீர்கள் என கேட்டார். அதற்கு, எனக்கு என்னுடைய நாட்டை மிகவும் பிடிக்கும். நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுகிறேன். அதனால் களத்தில் விளையாடுபோது அனைத்தையும் நாட்டு அணிக்காக கொடுக்க வேண்டுமே என்றுதான் தோன்றுமே தவிர காயமடைந்தால் என்ன ஆவது என்றெல்லாம் சிந்திக்க மாட்டேன். என்னால் முடிந்த வரை விக்கெட்களை வீழ்த்தி நாட்டுக்காக வெற்றியை பெற்றுதர வேண்டும் என்றுதான் முயற்சிப்பேன் என அவர் கூறினார். தற்போது ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இதுவரை 6 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: இதெல்லாம் ஒரு டார்கெட்டே இல்ல.. எச்சரித்த இங்கிலாந்து வீரர் ஜோஸ் டங்!
மேலும் படிங்க: இன்னும் 5 வருஷம்.. ஆனால்! ஓய்வு குறித்து மனம் திறந்த எம். எஸ். தோனி!