Ind vs Eng: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடைசி போட்டியில் திரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்த அணி வென்ற இரண்டு போட்டிகளுமே ஜஸ்பிரித் பும்ரா இல்லை. அவர் பங்கேற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டியில் இந்திய அணி தோற்றது, ஒரு போட்டி சமனின் முடிந்தது. இந்திய அணி வெற்றி பெற்ற போட்டிகளில் முகமது சிராஜ் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடினார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில், சிராஜ் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 7 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இதையடுத்து இந்திய அணி வென்றே ஆக வேண்டும் என கட்டாயத்தில் இருந்த நிலையில், முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். அப்போட்டியில் அவர் மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்தினார். குறிப்பாக கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணி 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருக்கும்போது, சிராஜ் யார்க்கர் வீசி அன்கிட்சன்னை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு சிராஜ் முக்கிய காரணமாக இருந்தார்.
பிரபல பாடகி வாழ்த்து
சிராஜின் பந்து வீச்சை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சிராஜுக்கு வந்த வாழ்த்திலேயே ஜனாய் போஸ்லே வாழ்த்துதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில், உன்னை நினைத்து பெருமை கொள்கிறேன். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறி உள்ளார். அதை தொடர்ந்து இரண்டு மூன்று இன்ஸ்டா ஸ்டோரிகளும் போட்டுள்ளார். இதனால், இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே கேள்வி எழும்பி உள்ளது.
ஜனாய் போஸ்லே யார்?
ஏற்கனவே இவர்கள் குறித்து பல வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது ஜனாய் போஸ்லே சிராஜை பாராட்டி போட்ட பதிவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல பாடகி ஆசா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே. இவரும் பிரபல பாடகியாக திகழ்ந்து வருகிறார். இவரது வயது 23 ஆகும். சிராஜ் மற்றும் ஜனாய் காதலிப்பதாக ஏற்கனவே வதந்திகள் பரவிய நிலையில், அப்போதே இதற்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
கடந்த சில மாதத்திற்கு முன்னர் சமூக வலைத்தள பதிவில், முகமது சிராஜ் தன்னுடைய அண்ணன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தங்கை அண்ணன் உறவில் பழகி வருவதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜனாய் போஸ்லே.
மேலும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து தொடர்: அதிக ரன், விக்கெட் எடுத்த வீரர்கள் யார் யார்?
மேலும் படிங்க: விராட் கோலியுடன் காதல்? பாகிஸ்தான் வீரருடன் திருமணம்? தமன்னாவே சொன்ன விஷயம்!