India vs England 5th Test: கடந்த ஜூன் மாதம் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை விளையாடிய்து. இத்தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்திருந்தாலும், தொடர் முழுவதும் இங்கிலாந்து அணிக்கு சாதகமாகதான் சென்றது.
முதல் மூன்று போட்டி முடிவடைந்தபோது, இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அப்போது, இந்திய அணி நான்காவது போட்டியை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் அப்போட்டியை இந்திய அணியால் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. பின்னர் கடைசிப் போடியானது ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமநிலை செய்தது.
இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தபோது, கிறிஸ் வோக்ஸ் காயத்துடன் களம் இறங்கினார். அவரது இடது கையில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் ஒரு கையுடன் களத்திற்கு வந்தார். இது அனைவரது மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது அணிக்கு 100 ரன்கள் தேவையாக இருந்திருந்தாலும், களமிறங்கி இருப்பேன் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிறிஸ் வோக்ஸ் கூறியதாவது, “அணிக்கு வெற்றி கிடைக்க 100 ரன்கள் தேவைப்பட்டாலும், அது என்னுடைய கடமை என நான் பேட்டிங் செய்ய களமிறங்குவேன். காயத்துடன் களமிறங்குவது கடினமானது. ஆனால் ஒருபோது களமிறங்காமல் இருந்துவிடலாம் என நினைக்கவில்லை. எனக்காக ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு சிறப்பான உணர்வை தந்தது. இந்திய வீரர்கள் சிலர் வந்து என்னை பாராட்டினார்கள் என்றார். மேலும், கிறிஸ் வோக்ஸ் ஓவல் டெஸ்ட் போட்டிக்கான நான்காம் நாள் முதல் தனது வலது கையை பயன்படுத்தி தனிப்பட்ட பயிற்சியுடன் ‘ஒற்றை கை பேட்டிங்’ பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக கூறினார்.
முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் அசாதாரண ஆட்டத்திற்கு உதவினர். இறுதியில் இங்கிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: இன்னும் 15 – 20 வருஷம் சிஎஸ்கே அணியுடன் இருப்பேன்.. ஆனால்? எம்.எஸ்.தோனி!
மேலும் படிங்க: ரோகித், விராட் இல்லனா ஒரு பிரச்சனையும் இல்லை.. இந்திய அணியின் எதிர்காலம் நல்லா இருக்கும்!