Indian Team Announcement Date: வர இருக்கும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் என்ன என்பதன் விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ்
இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். ஆனால் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிறந்த பயிற்சிகளை செய்து மீண்டும் முழு உடல் தகுதியை பெற்று நலமுடன் உள்ளார். இதையடுத்து, 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அணியில் தேர்வில் தற்போது இந்தியா ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் 2025 ஆசிய கோப்பை அணி அறிவிப்பை வெளியிடப் போகின்றனர். இந்த அறிவிப்பை அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டன் சுப்மன் கில்
இந்த தொடரில் சுப்மன் கில், அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருப்பார் என்றும் அவருக்கு துணைக்கேப்டன் பதவி வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தற்போது துணைக்கேப்டனாக இருக்கும் அக்சர் படேல் இந்த பதவியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிகிறது.
ஏற்கனவே இந்திய டி20 அணியில் இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மாற்று வீரராக அறியப்படும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இளம், திறமையான வீர்ர்களை கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியை உருவாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆசிய கோப்பை தொடர்
ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங் காங், யுஏஇ, ஒமன் என 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் இத்தொடரில் சிறப்பாகவும் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் செயல்திறனை வைத்தே 2026 டி20 உலகக் கோப்பை அணி தேர்வு இருக்கும் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
About the Author
R Balaji