நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று 17 வருட வரட்சியை போக்கி சாதனை படைத்தது. கும்ப்ளே, டிவில்லியர்ஸ், போன்ற ஜாம்பவான்கள் இருந்த ஆர்சிபி அணி வெல்ல முடியாமல் தவித்தது. ஏன் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. இந்த சூழலில் ரஜத் பட்டிதார் தலைமையிலான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று அசத்தியது.
பல ஆண்டுகளாக சிஎஸ்கே, மும்பை அணி ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்த நிலையில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி அவர்களுக்கு தக்க பதிலடியை கொடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி ரசிகர்களுக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் போன்றோரிடம் பேசுவதற்கு ஏதுவாக இந்த கோப்பை அமைந்துள்ளது. இருப்பினும் சிஎஸ்கே மற்றும் மும்பை ரசிகர்கள் எங்களிடம் 5 கோப்பைகள் இருக்கிறது என தொடர்ந்து கிண்டல் செய்துதான் வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் கோப்பைகளை வெல்ல எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்பது தற்போது ஆர்சிபி ரசிகர்களுக்கு புரிந்திருக்கும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு பேசி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய ராயுடு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது நன்றாக இருந்தது. ஒரு நல்ல உணர்வை மனதிற்கு அளித்தது. தற்போது, ஆர்சிபி ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும், சென்னை மற்றூம் மும்பை அணி 5 கோப்பைகளை வெல்ல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று. 5 கோப்பைகளை வெல்வது எவ்வளவு கடினம் என்று அவர்களுக்கு புரிந்திருக்கும். ஒரு முறை வெல்வதே இவ்வளவு கடினம் என்றால், 5 முறை வெல்வது எவ்வளவு கடினம என உணர்ந்திருப்பார்கள்.
அவர்கள் ஒரு கோப்பையை வெல்வதற்கு 18 வருடங்கள் செலவிட்டுள்ளார்கள். 5 கோப்பை வெல்ல வேண்டும் என்றால், அதற்கு 72 வருடங்கள் தேவைப்படலாம். தற்போது இதுவரை வெல்லாத கோப்பையை வென்றதால், ஆர்சிபி ரசிகர்கள் சற்று அமைதியாக இருப்பார்கள் என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
About the Author
R Balaji