மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. ஆகஸ்டு 20ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், முதல்கட்ட குற்றப்பத்திரிகயை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் […]
