One Year Of Vaazhai: "மாரி சார் என்னை +2 முடிச்சதும் சென்னை வர சொல்லியிருக்கார்” – பொன்வேல் பேட்டி

பசியின் குரூரத்தையும் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களின் வறுமையின் கொடூரத்தையும் பெருவலியோடு பிரதிபலித்து இதயம் கனக்க வைத்தது, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’.

Vaazhai
Vaazhai

பார்வையாளர்களின் உணர்வுகளைக் கொய்து, ஒட்டுமொத்த மக்களின் மனதைப் பிழிந்த வாழை, வரவேற்புகளைக் குவித்து, பெரும் வெற்றியைப் பெற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், படத்தில் சிவனைந்தனாக வாழ்ந்த கதையின் நாயகன் பொன்வேலிடம் பேசினோம்.

’வாழை’ வெளியானதிலிருந்து தொடர்ந்து கொண்டாடப்படுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தொடர்ச்சியா விருதுகள் வாங்குறதும் மகிழ்ச்சியைக் கொடுக்குது.

’வாழை’ படத்துல நடிச்ச சிவனைந்தன் நீங்கதானேன்னு கேட்டு எல்லோரும் ஆசையா வந்து போட்டோ எடுத்துக்கிறாங்க.

நான் சினிமால்லாம் பார்க்கமாட்டேன். ஸ்போர்ட்ஸ்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஆனா, மாரி செல்வராஜ் சாரால நானும் சினிமாவுக்கு வருவேன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்ல. நான் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன். யார்க்கிட்டேயும் சரியா பேசமாட்டேன்.

‘டேய்… எப்படிடா கேமரா முன்னாடி பயமில்லாம ரியலா நடிச்சே’ன்னு என்ன மட்டுமில்ல.. படத்துல நடிச்ச எல்லோரையுமே கேட்கிற அளவுக்கு எங்க திறமையை வெளிக்கொண்டு வந்தார் மாரி செல்வராஜ் சார். எல்லா புகழும் அவருக்குத்தான்.

Vaazhai - Mari Selvaraj
Vaazhai – Mari Selvaraj

நான் இப்போ ப்ளஸ் டூ காமர்ஸ் குருப் படிக்கிறேன். நல்ல மார்க் எடுக்கணும்னு படிப்புலதான் முழு கவனத்தையும் செலுத்திட்டிருக்கேன்.

ஒரே வருத்தம் பூங்கொடி டீச்சரைப் பார்க்க முடியலங்கிறதுதான். நிகிலா விமல் மேடம் ரொம்ப அன்பா பழகுவாங்க. நான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் எங்க ஸ்கூல்ல ஃபுல் சப்போர்ட் கொடுத்தாங்க.

படத்துல மட்டுமில்ல ரியல் லைஃப்லயும் நல்லாதான் படிப்பேன். என்னுடைய ஃபேவரைட் சப்ஜெக்ட் தமிழ். படிச்சதும் சட்டுனு மனசுல பதிஞ்சிடும்.

’வாழை’ படம் மாதிரியே நாங்க ரொம்ப எளிமையான குடும்பம்தான். எனக்கு ரெண்டு அண்ணன்கள் இருக்காங்க. நானுமே தார் சொமந்திருக்கேன்.

ஒரு தாருக்கு பத்து ரூவான்னா 20 தாருக்கு 200 ரூவா கெடைக்கும். நம்ம எவ்ளோன்னாலும் தூக்கிக்கலாம். நம்ம தூக்குறது பொறுத்து காசு தருவாவ.

வீட்டுல எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் எங்க மூணு பேரையுமே அப்பா தனியார்ப் பள்ளியில்தான் படிக்க வெச்சார்.

Vaazhai
Vaazhai

அப்பாவோட சூழலைப் புரிஞ்சிக்கிட்டு, செலவுக்கு எதுவும் காசு கேக்க மாட்டேன். நானே வாழைத்தார் சொமந்த காசை வெச்சு ட்ரெஸ் எல்லாம் எடுத்துக்குவேன்.

’வாழை’ படத்துல நடிச்ச பிறகுதான் அம்மாவோட கஷ்டத்தையெல்லாம் புரிஞ்சுக்கிட்டேன்.

மாரி செல்வராஜ் சார் எல்லோரிடமும் ரொம்ப அன்பா பழகுவார். அவர் மட்டும் இந்த வாய்ப்பை எனக்குக் கொடுக்காம போயிருந்தா, என்னோட திறமை வெளியே தெரியாம போயிருக்கும்.

என்னுடைய டேலண்ட புரிஞ்சுகிட்டு எனக்கு ஏற்ற மாதிரியும் திருநெல்வேலி மக்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுத்தா புரியுமுங்கிறதயும் பார்த்து பார்த்து அக்கறையா சொல்லிக்கொடுத்தார்.

ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சதும் எல்லாரும் சேர்ந்து ஒன்னாதான் படத்த பாத்தோம். என்னோட நடிப்பைப் பார்த்துட்டு மாரி செல்வராஜ் சார் ஷாக் ஆகி பாராட்டினார். எல்லோரையுமே ரொம்ப என்கரேஜ் பண்ணுவார்.

படத்துல எல்லா சீன்லயுமே நல்லா பண்ணிட்டேன். ஆனா. டான்ஸ் மட்டும் எனக்கு சுத்தமா வராது. ஆனாலும் எனக்கு ஏத்த மாதிரி ஈஸி ஸ்டெப் தான் சொல்லித் தந்தாரு. எல்லார்கிட்டயும் எப்படி பழகுனாலும் என்கிட்ட ரொம்ப பாசமா, செல்லமா தான் பழகுவாரு. சினிமான்னா என்னனும் மாரி செல்வராஜ் சார் கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.

Vaazhai
Vaazhai

’வாழை’ படத்துக்குப் பிறகு எனக்கு சினிமால சான்ஸ் வரல. வந்தா கண்டிப்பா பண்ணுவேன். மாரி சார், என்னை ப்ளஸ் டூ முடிச்சதும் காலேஜ் படிக்க சென்னை வரசொல்லி இருக்கார்.

எங்க படிப்பு மேல ரொம்ப அக்கறையோட இருப்பார். அவரோட ஊக்கத்தால்தான், ப்ளஸ் டூ முடிச்சதும் சென்னையில் விஸ்காம் படிக்கலாம்னு இருக்கேன். என்னோட எதிர்காலம் சினிமாதான்” என்கிறார் கனவுகளுடன். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.