ஜெர்மனியில் தமிழ் குடும்பத்தினரை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெர்லின்,

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று(ஆகஸ்ட் 31) ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழர்கள் வரவேற்ற புகைப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

“ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழ் குடும்பத்தினரை சந்தித்தேன். தமிழ் மக்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன். தமிழகத்தின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.