இந்தியன் பிரீமியர் லீக்கில் கோப்பை வாங்காத அணி என்று விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த ஆர்சிபி அணி, அதனை 2025 சீசனில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 18 ஆண்டுகால தோல்விக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த ஆண்டு தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அதன் வெற்றி பேரணியில் நிகழ்ந்த சம்பவம் சோக நிகழ்வாக மாறியது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பெங்களூருவில் நிகழ்ந்த stampede விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவத்திற்கு பிறகு, பாதுகாப்பு காரணங்களால் M. சின்னசாமி ஸ்டேடியத்தை RCB அணி இனி ஹோம் கிரவுண்டாக கருத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
பெங்களூருவில் நடைபெற வேண்டிய மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் கூட, இந்த சூழ்நிலையின் காரணமாக மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெங்களூரு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். சின்னசாமி மைதானம் நகரத்தின் மையத்தில் உள்ளதால் இது போன்ற சிரமங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மைதானத்தை நகரத்திற்கு வெளியே கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. புதிய மைதானம் வரும் வரை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் ஹோம் கிரவுண்டராக பின்வரும் 3 மைதானங்கள் இருக்கலாம்.
VCA ஸ்டேடியம், ஜம்தா, நாக்பூர்
இந்த ஸ்டேடியம் நாக்பூரின் தெற்குபகுதியில் அமைந்துள்ளது. வீரர்களுக்கான வசதிகள், புல்வெளியின் தரம், பாதுகாப்பு, ரசிகர்களுக்கான இருக்கைகள் என அனைத்திலும் உலக தரமாயுள்ளது. உள்நாட்டு போட்டிகள் பல இங்கு நடைபெற்றுள்ளன. மேலும் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவின் சொந்த ஊர் என்பதால் உள்ளூர் ரசிகர்களை அதிகம் ஈர்க்க வாய்ப்புள்ளது.
ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூர்
மற்றொரு சாத்தியமான விருப்பங்களில் ஒன்றாக இந்தோர், நியூ பலாசியாவில் அமைந்துள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம் பார்க்கப்படுகிறது. இந்த மைதானம் வரலாற்று சிறப்பு மிக்கது. மராத்திய அரச குடும்பமான ஹோல்கர் வம்சத்தின் பெயரால் இந்த ஸ்டேடியம் அழைக்கப்படுகிறது. இந்த மைதானம் பல்வேறு சர்வதேச போட்டிகளை நடத்தியுள்ளது. ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் இந்தோரையே பூர்விகமாக கொண்டவர் என்பது கூடுதல் சிறப்பு.
கோடாம்பி ஸ்டேடியம், வதோதரா
வடோதராவில் அமைந்துள்ள புதிய கோடாம்பி ஸ்டேடியம் கூட RCB அணிக்கான இன்னொரு மாற்று வாய்ப்பாக கருதப்படுகிறது. நகரின் புறநகர பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு ரசிகர்கள் அதிகமாக திரண்டாலும் நெரிசல் அல்லது அச்சுறுத்தும் நிலைமைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இதனால் ரசிகர்கள் பாதுகாப்பாக போட்டியை ரசிக்க முடியும். அதிநவீன வசதிகளும், அமைதியான சூழலும் கொண்டுள்ள இந்த ஸ்டேடியம், RCB அணிக்கு புதிய ஹோம் கிரவுண்டாக சாத்தியமான வாய்ப்பு உள்ளது.
About the Author
RK Spark