அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதையடுத்து இந்தாண்டு மே மாதத்தில் தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். இதனால் இனி அவரை ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.
Add Zee News as a Preferred Source
இந்த நிலையில், ரோகித் சர்மாவிற்கு யோ – யோ உடற்தகுதி பரிசோதனைகள் நடந்ததாகவும் அவர் அதில் 19.4 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் அவர் அந்த பரிசோதனையில் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அண்மையில் பெங்களூருவின் பிசிசிஐ சிறப்பு மையத்தில் வழக்கமான உடற்தகுதி பரிசோதனையில் ரோகித் சர்மா பங்கேற்றுள்ளார். அவருடன் சுப்மன் கில் உட்பட ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் பல வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த சூழலில் தான் ரோகித்தின் முடிவுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
ரோகித் சர்மாவின் முடிவுகள் குறித்து இதுவரை பிசிசிஐ வெளியிடவில்லை. விதிமுறைகளின்படி, வீரரின் உடற்தகுதி மதிப்பெண்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. ஒருவேளை பரிசோதனை முடிவுகள் கசிந்தால், சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், ரோகித் சர்மாவின் முடிவுகளை பிசிசிஐ அல்லது அதன் பிரதிநிதிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அவரின் மதிப்பெண் குறித்து வெளியாகும் தகவல்கள் ஏதும் உண்மை இல்லை.
இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகளில் ஒருவர் பேசுகையில், அனைத்து வீரர்களும் சீசனுக்கு முந்தைய உடற்தகுதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இது ஒப்பந்தப்படி கட்டாயமாகும். இந்த பரிசோதனைகள், வீர்ர்கள் எந்த பகுதிகளில் முன்னேற்றம் தேவை அல்லது எங்கு குறைவாக உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள உதவுகின்றன என அவர் தெரிவித்தார். ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் பலர் உடற்தகுதி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
About the Author
R Balaji