இந்தூர் மருத்துவமனையில் எலிகள் குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ராகுல் காந்தி கண்டனம்

இந்தூர்: இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனையில் பச்​சிளம் குழந்​தைகள் தீவிர சிகிச்​சைப் பிரிவில் (நியோ நேட்டல் சிகிச்சைப் பிரிவு) அனுமதிக்கப்பட்டிருந்த 2 குழந்தைகள் எலிகள் கடித்துக் குதறியதில் உயிரிழந்த சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இது விபத்தல்ல; அப்பட்டமான கொலை. இந்தச் சம்பவம் அச்சம் தருகிறது. இது சற்றும் மனிதாபிமானமற்ற சம்பவம். இதைக் கேட்கும்போது உடம்பு சில்லிடுகிறது. ஒரு தாயின் குழந்தை நிரந்தரமாக களவாடப்பட்டுள்ளது. காரணம் அரசாங்கத்தின் அலட்சியம். அரசு அதன் கடமையை செய்யத் தவறியதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று காங்கிரச் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன? – மத்​தியப் பிரதேச மாநிலம் இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனை செயல்​பட்டு வருகிறது. இந்த மருத்​து​வ​மனை​யில் உள்ள என்​ஐசியூ எனப்​படும் நியூநேட்​டல் இன்​டென்​சிவ் கேர் யூனிட்​டில்​ (பச்​சிளம் குழந்​தைகள் தீவிர சிகிச்​சைப் பிரிவு) பச்​சிளம் குழந்​தைகள் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில், இந்​தப் பிரி​வில் இருந்த 2 பச்​சிளம் குழந்​தைகளை, எலிகள் கடித்​துக் குதறி​யுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இந்த மருத்​து​வ​மனை​தான் மத்​திய பிரதேச மாநிலத்​திலேயே மிகப் ​பெரிய மருத்​து​வ​மனை என்று பெயர் பெற்​ற​தாகும்.

அந்த சிறப்பு வாய்ந்த மருத்து​வ​மனை​யின் என்​ஐசியூ பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்த குழந்​தைகளை எலிகள் கடித்​தது. இதைத் தொடர்ந்து அந்​தக் குழந்​தைகள் வேறு வார்​டுக்கு மாற்​றப்​பட்டு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.