சென்னை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதன் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் விளையாட உள்ளது.
இந்நிலையில் 8 அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் முழு விவரத்தை இங்கு காணலாம்..!
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
பாகிஸ்தான்: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷஹீன் அப்ரிடி, சுப்யான் முகிம்.
ஆப்கானிஸ்தான்: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, செதிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பாடின் நைப், ஷராபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசன்பர், நூர் அகமது, பரித் மாலிக், நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி
வங்காளதேசம்: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைப் ஹாசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஷைப் உதீன்.
ஹாங்காங்: யாசிம் முர்தாசா (கேப்டன்), பாபர் ஹயாத், ஜீஷன் அலி, நியாசகத் கான் முகமது, நஸ்ருல்லா ராணா, மார்ட்டின் கோட்ஸி, அன்ஷுமன் ராத், கல்ஹான் மார்க் சாலு, ஆயுஷ் ஆஷிஷ் சுக்லா, முகமது அய்சாஸ் கான், அதீக் உல் ரஹ்மான் இக்பால், கிஞ்சித் ஷா, அடில் மெஹ்மூத், ஹாரூன் முகமது அர்ஷத், அலி ஹாசன், ஷாஹித் வாசிப், கசன்பர் முகமது, முகமது வஹீத், அனஸ் கான், எஹ்சான் கான்.
ஓமன்: ஜதிந்தர் சிங் (கேப்டன்), ஹம்மாத் மிர்சா, விநாயக் சுக்லா, சுப்யான் யூசுப், ஆஷிஷ் ஒடெடெரா, ஆமிர் கலீம், முகமது நதீம், சுப்யான் மெஹ்மூத்,ஆர்யன் பிஷ்ட், கரண் சோனாவலே, ஜிக்ரியா இஸ்லாம், ஹஸ்னைன் அலி ஷா, பைசல் ஷா, முகமது இம்ரான், நதீம் கான், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா.
யுஏஇ: முகமது வாசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் சர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹேய்டர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது பாரூக், முஹம்மது ஜவதுல்லா, முகமது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.
இலங்கை: சரித் அசலன்கா (கேப்டன்), குசல் மென்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ், கமில் மிஷார, தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலாலகே, சாமிக்க கருணாரத்னே, தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷாரா, மதீஷா பதிரனா.