ஆசிய கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், ஓமன், யுஏஇ ஆகிய 8 நாடுகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான அணிகளை அனைத்து அணிகளும் அறிவித்த நிலையில், வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Add Zee News as a Preferred Source
டி20யில் தன்னை நிரூபித்த சஞ்சு சாம்சன்
இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொடரில் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் களமிறங்கி தடுமாறிய சாம்சனுக்கு கெளதம் கம்பீர் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் சரியாக பயன்படுத்திக்கொண்டு 3 சதங்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் தனக்கான ஒரு இடத்தை பதித்தார்.
இந்த சூழலில், வீரர் சுப்மன் கில்லை அனைத்து வடிவ அணிக்கு கேப்டனாக்க இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக டி20 அணிக்கு துணை கேப்டன் பதவியை வழங்கி இருக்கிறது. இதனால் அவர் பிளேயிங் 11ல் விளையாடுவது உறுதியாகி உள்ளதால், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. 3வது 4வது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரும் அதன் பின்னர் மிடில் அர்டரில் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் ஆகியோர் உள்ளனர்.
சுனில் கவாஸ்கர் கருத்து
அதே சமயம் சஞ்சு சாம்சனுக்கு போட்டியாக விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் உள்ளார். இந்த நிலையில், சஞ்சு சாம்சன் ஒரு முக்கியமான வீரர். எனவே ஜிதேஷ் சர்மா, சிவம் துபே அல்லது ரிங்கு சிங் இவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை களமிறக்குங்கள் என பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரரை நீங்கள் ரிசர்வ் வீரராக எடுத்து செல்ல முடியாது. அவர் கண்டிப்பாக பிளேயிங் 11ல் இருக்க வேண்டும்.
அவரை 3வது இடத்தில் அல்லது தேவைப்பட்டால் மிடில் ஆர்டரில் பயன்படுத்தலாம். எனக்கு தோன்றுகிறது என்னவென்றால், சஞ்சு சாம்சன் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவார். அதன் பின் அவருடைய ஃபார்மை பொறுத்து மற்ற போட்டிகளில் பங்கேற்கலாம். ரிங்கு சிங், சிவம் துபே போன்றோர் தங்களின் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். டி20 போட்டிகளில் உங்களால் 8வது இடம் வரை பேட்டிங்கை நுழைக்க முடியாது. ஏனெனில் பந்து வீச்சில் உங்களுக்கு வெரைட்டி தேவை என கூறினார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்.
About the Author
R Balaji