India vs Pakistan Live Score Updates In Tamil: ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
Add Zee News as a Preferred Source
IND vs PAK Live: 8 அணிகள்… இரண்டு சுற்றுகள்
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோத உள்ளன.
குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். அந்த சுற்றிலும் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். சூப்பர் 4 சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
IND vs PAK Live: ஆசிய கோப்பை புள்ளிப்பட்டியல்
12 குரூப் சுற்று போட்டிகள், ஆறு சூப்பர் 4 சுற்று போட்டிகள், ஒரு இறுதிப்போட்டி என மொத்தம் 19 டி20ஐ போட்டிகள் ஆசிய கோப்பை 2025 தொடரில் திட்டமிடப்பட்டது. இதுவரை 5 குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. குரூப் ஏ-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் முறையே முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளன. குரூப் பி-ல் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணி முறையே முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளன.
IND vs PAK Live: இந்தியா – பாகிஸ்தான் போட்டி
அந்த வகையில், குரூப் ஏ-ல் முதலிடத்தை நிர்ணயம் செய்யும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று போட்டி இன்று (செப். 14) நடைபெறுகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும். டாஸ் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இரு அணிகளும் அதே பிளேயிங் லெவனோடுதான் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IND vs PAK Live: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேரலையில் பார்ப்பது எப்படி?
அந்த வகையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொலைக்காட்சியை பொருத்தவரை Sony Sports நெட்வோர்க் சேனல்களில் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. மேலும், SonyLiv தளத்திலும் நீங்கள் நேரலையில் காணலாம். ஆனால், SonyLiv தளத்தில் பார்க்க நீங்கள் சந்தா செலுத்த வேண்டும். இலவசமாக பார்க்க இயலாது.
IND vs PAK Live: ஜீ தமிழ் நியூஸ் சேனலின் தமிழ் வர்ணனை
ஆனால், நீங்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் ஒவ்வொரு பால் அப்டேட்டையும் நீங்கள் தமிழ் வர்ணனையையுடன் இலவசமாக கண்டுகளிக்கலாம். அதற்கு ஜீ தமிழ் நியூஸ் சேனல் பிரத்யேகமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கான இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது. ஜீ தமிழ் நியூஸ் சேனல் அதன் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நேரலை வீடியோவாக மேட்ச் அப்டேட்டை நீங்கள் கண்டுகளிக்கலாம். அதாவது, போட்டியின் வீடியோ உங்களுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு பந்துகளின் அப்டேட்டும் திரையில் தெரியும்.
திரையில் போட்டியின் ஓவர், ஸ்கோர், விக்கெட், பேட்டிங் செய்யும் பேட்டர்கள் மற்றும் அவர்களின் ரன்கள், பந்துவீசும் பௌலர், அந்த பந்தில் என்ன நடந்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தனித்தனியாக திரையிலேயே தெரிந்துவிடும். மேலும், பின்னணியில் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் எங்கள் தொகுப்பாளர்களின் தமிழ் வர்ணனையை நீங்கள் கேட்கலாம். நீங்கள் நேரலையை பார்க்க முடியாதபட்சத்தில், காதால் வர்ணனையை மட்டும் கேட்க முடியும் என்றால் இது உங்களுக்கு சிறப்பான கிரிக்கெட் அனுபவத்தை கொடுக்கும். மேலும், போட்டியை நேரலையில் காண SonyLiv சந்தா இல்லாவிட்டாலும், உங்களால் நேரலையை பார்க்க முடியவில்லை என்றாலும் இதன்மூலம் மேட்ச் ஸ்கோர் மற்றும் பிற விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
IND vs PAK Live: தமிழ் வர்ணனை லிங்க் இதோ!
எங்கள் ஜீ தமிழ் நியூஸ் சேனலின் கிரிக்கெட் வர்ணனையின் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் வீடியோக்களின் இணைப்புகள் இதோ…:
யூ-ட்யூப் தமிழ் வர்ணனையின் லிங்க்
பேஸ்புக் தமிழ் வர்ணனையின் லிங்க்