ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கி இருக்கிறது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே அபார வெற்றியை பெற்றுள்ளது. அடுத்ததாக ஓமன் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதில் அவர் 7 ஓவர்கள் வீசி 3 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இந்த சூழலில், அவருக்கு ஓமனுக்கு எதிரான அடுத்த போட்டியில் ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது என கூறப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமை காரணமாக அவ்வப்போது ஓய்வெடுத்து வருகிறார். இதனால் அவரை முக்கிய போட்டிகளில் மட்டும் பும்ராவை பயன்படுத்திவிட்டு மற்ற போட்டிகளில் அவருக்கு ஓய்வு வழங்க நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. அதன்படி அடுத்த போட்டியில், அவருக்கு ஓய்வு வழங்க உள்ளனர்.
அப்படி ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கும் பட்சத்தில், பிளேயிங் 11ல் அர்ஷ்தீப் சிங்கை கொண்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. அர்ஷ்தீப் சிங்தான் இந்திய அளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக உள்ளார். அவர் 63 டி20 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்தபடியாக யுஸ்வேந்திர சாஹல் இருக்கிறார். அவர் 80 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இவரை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 95 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 70 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji