India A vs Australia A: ஆஸ்திரேலியா ஏ அணி தற்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. டெஸ்ட் லக்னோவிலும், ஒருநாள் போட்டிகள் நாக்பூரிலும் நடைபெற உள்ளது.
Add Zee News as a Preferred Source
IND A vs AUS A: 532 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா ஏ அணி
அதில் முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த செப். 16ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 532 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து, ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக சாம் கான்ஸ்டஸ் 109, ஜாஷ் பிலிப் 12, கேம்பெல் 88, லியம் ஸ்காட் 81, கூப்பர் கானொலி 70 ரன்களை குவித்தனர். இந்திய அணி பந்துவீச்சில் ஹர்ஷ் தூபே 3, குர்னூர் பிரர் 2, கலீல் அகமது 1 விக்கெட்டை கைப்பற்றினர். பிரசித் ரகிருஷ்ணா மற்றும் தனுஷ் கோட்டியான் விக்கெட் எடுக்கவில்லை.
IND A vs AUS A: துருவ் ஜுரேல் சதம்
தொடர்ந்து இந்திய அணி நேற்று பேட்டிங் செய்ய தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 116 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இந்தியா இழந்திருந்தது. மூன்றாம் நாளான இன்று முழுவதுமாக இந்திய அணியே பேட்டிங் செய்தது. தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 403 ரன்களை குவித்ததுள்ளது. இந்திய அணியை பொருத்தவரை அபிமன்யூ ஈஸ்வரன் 44 ரன்கள், நாராயண் ஜெகதீசன் 64, சாய் சுதர்சன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தேவ்தத் படிக்கல் 86, துருவ் ஜுரேல் 113 ரன்களுடன் தற்போதும் களத்தில் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
IND A vs AUS A: ஆட்டமிழந்த ஷ்ரேயாஸ் ஐயர்
அதாவது பேட்டிங் செய்துள்ள 6 பேரில் நான்கு பேர் அரைசதம் கடந்துள்ளனர், அபிமன்யூ ஈஸ்வரனும் அரைசதத்தை நெருங்கும்போது ஆட்டமிழந்தார். ஆனால், ஷ்ரேயாஸ் மட்டுமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். அதுவும் ஆப் ஸ்பின்னர் கோரி ஜே ரோச்சிசியோலி என்பவரிடம் ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
IND A vs AUS A: தொடர்ந்து சொதப்பும் ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் உள்நாட்டில் நடந்த இங்கிலாந்து தொடரில்தான் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். அதன்பின் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. டி20ஐ அணியிலும் அவருக்கு வாய்ப்பில்லாத சூழலில், தற்போது ஓடிஐ அணியில் மட்டும் விளையாடி வருகிறார். தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு பின் இந்தியாவில் நடைபெறும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்திய அணியில் நம்பர் 5 இடத்தில் விளையாடப்போவது யார் என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. இங்கிலாந்து தொடரில் கருண் நாயர் சொதப்பியதால், உள்நாட்டு தொடரில் யார் நம்பர் 5 ஸ்பாட்டில் விளையாடுவார் என்ற கேள்வி இருந்தது. கடந்தாண்டு அந்த இடத்தில் சர்பராஸ் கான் விளையாடி வந்தார். சர்பராஸ் கானுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளே வருவார் என கூறப்பட்டது. ஆனால் ஷ்ரேயாஸ் டெஸ்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார் என்றே கூற வேண்டும்.
IND A vs AUS A: இந்திய அணியில் இடம் கஷ்டம்
முதல் தர போட்டிகளை எடுத்துக்கொண்டால் துலீப் டிராபியிலும் மத்திய மண்டலம் அணிக்கு எதிராக 2 இன்னிங்ஸையும் சேர்த்து வெறும் 37 ரன்களை மட்டுமே ஷ்ரேயாஸ் ஐயர் அடித்திருந்தார். அவரை இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமித்ததும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் 8 ரன்களில் ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சி அளித்துள்ளார். இதன்மூலம் அவர் டெஸ்ட் அணிக்கு திரும்புவதும் கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்து இன்னும் அவருக்கு ஒரு வாய்ப்புள்ளது. வரும் செப். 23ஆம் தேதி இதே லக்னோ மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
About the Author
Sudharsan G