திருவனந்தபுரம்,
கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி பம்பையில் இன்று காலை தொடங்கியது. இதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசியதாவது:
“காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நாம் சிந்திக்க வேண்டும். 2019ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின்போது, தேவசம்போர்டின் தினசரி செயல்பாடு கூட நெருக்கடியில் இருந்தது. அந்த நேரத்தில், அரசாங்கம், வாரியத்துக்கு ரூ.140 கோடி நிதி உதவியை வழங்கியது. மேலும், புதுப்பித்தல் பணிக்காக ரூ.123 கோடியை வழங்கியது. ஒட்டுமொத்தமாக சன்னிதானம், பம்பா மற்றும் மலையேற்றப் பாதைகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக ரூ.1,033.62 செலவிடப்பட இருக்கிறது.” என தெரிவித்தார்.