புதுடெல்லி,
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்கா, எச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான ராகுல் காந்தி, மோடியை சாடியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, ராகுல் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இந்தியாவுக்கு மிகவும் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவையும், தற்போது அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தியதன் செய்தியையும் இணைத்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: – நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.