லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் செயின்ட் ஹெலன்ஸ் என்ற இடத்தில் உள்ள லிங்மெல் அவென்யூ பகுதியில் குழந்தைகளுக்கான தனியார் காப்பகம் ஒன்று செயல்பட்டது. பல சர்ச்சைகளால் அது மூடப்பட்டு உள்ளது.
இதில், டீன்-ஏஜ் சிறுவனான மகனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டனர் என காப்பக பெண் பணியாளர்களுக்கு எதிராக சிறுவனின் தாயார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
லிவர்பூல் கிரவுன் கோர்ட்டில் இதுபற்றி விசாரணை நடந்தது. நீதிபதி பிரையன் கும்மிங்ஸ் முன்னிலையில் தொடர்ந்து பல நாட்களாக இந்த வழக்கு விசாரணை நடந்தது.
இதன்படி, லிண்டி லீ (வயது 44), மோர்கன் குவிக்லி (வயது 29) ஆகிய இரு பெண்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இங்கிலாந்தின் வாரிங்டன் பகுதியில் கேப்ஸ்தோர்ன் சாலையில் லிண்டி வசித்து வருகிறார். அவரே அந்த காப்பகத்தின் முக்கிய பணியாளராகவும், உதவி மேலாளராகவும் இருந்துள்ளார்.
பெண் ஊழியரான குவிக்லி, அந்த டீன்-ஏஜ் சிறுவனுக்கு கேட்டமைன், கஞ்சா உள்ளிட்ட உயர் ரக போதை பொருட்களை கொடுத்து, அவரை பாலியல் நடவடிக்கையில் ஈடுபட தூண்டியிருக்கிறார்.
லிண்டே பணியின்போது, உடல் பாகங்கள் தெரியும் வகையிலும், மிக இறுக்கம் நிறைந்த மேலாடையை அணிந்தும் சென்றிருக்கிறார். உள்ளாடை எதுவும் இல்லாமல் சிறுவனை கவர்ந்திழுக்கும் நோக்குடன், அவர் ஆடை அணிந்து வந்துள்ளார்.
இதனை சக பெண் பெணியாளர் ஒருவர் தினமும் கவனித்து, சிறுவனின் தாயாரின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் சாட்சியாக மாறி கோர்ட்டில் கூறியுள்ளார்.
காப்பகத்திற்கு வேலைக்கு செல்வது போல் இல்லாமல், உடலின் மேலே, கீழே என உள்ளாடை அணியாமல் இன்று வந்திருக்கிறார் என உங்களால் கூற முடியுமளவுக்கு லிண்டி நடந்து கொண்டார் என குற்றச்சாட்டாக கூறினார்.
இதுதவிர, அந்த இறுக்கம் நிறைந்த ஆடைகளை உடலோடு ஒட்டி இழுத்து, உடலின் மேல் மற்றும் அந்தரங்க பாகங்கள் வெளியே தெரியுமளவுக்கு நடந்து கொண்டார். இதனை அந்த பெண் பணியாளரும், மற்றொரு ஆண் பணியாளரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு முறை மேலாடையில் பெயிண்ட் கொட்டி விட்டது என கூறி ஆடையை இழுத்து விட்டதுடன், சிறுவன் மீது உடலின் மேல் பகுதி, வயிற்று பகுதியை உரசி, அவனுக்கு சிரிப்பு ஊட்டியிருக்கிறார்.
லிண்டிக்கு திருமண நாளில் கூட வீட்டுக்கு செல்ல விருப்பமில்லை. கணவரை விரும்பவில்லை. பணத்துக்காகவே அவருடன் இருக்கிறார். 2 குழந்தைகளுக்கு தாயானபோதும் லிண்டி, சிறுவனை விடாமல் சுற்றி சுற்றி வந்திருக்கிறார். சிறுவனை பாலியல் சுரண்டலில் பயன்படுத்தி, அவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என சாட்சியான அந்த பெண் கூறியிருக்கிறார்.
உள்ளாடை அணியாத நிலையில், ஆடைகளை இறுக பிடித்து, உடல் பாகங்களை காட்டியதுடன், இளம் சிறுவன் முன் ஏறக்குறைய ஆடையை முழுவதும் அவிழ்த்து காட்டினார் என்றும் குற்றச்சாட்டாக கூறி கோர்ட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
அந்த சிறுவன் எப்படி அழகாக இருக்கிறான் என அவனுடைய தாயாரிடம் லிண்டி எப்போதும் கூறி வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதுபற்றி காப்பக பெண் மேலாளரிடம் அந்த பணியாளர் கூறியுள்ளார். அதுபற்றி விசாரிக்கப்படும் என அவருக்கு பதில் வந்துள்ளது. தேவைப்பட்டால் போலீசார் விசாரிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நடந்தது.
எனினும், லிண்டியின் வழக்கறிஞரான பில்லெட்டி இதனை மறுத்திருக்கிறார். லிண்டியின் மொபைல் போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்ததில், அவருடைய முழு குற்ற விவரங்களும் தெரிய வந்துள்ளன.
லிண்டி, 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுவனிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் நடந்து கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், அவருக்கு 23 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பெண் பணியாளரான குவிக்லி, சட்டவிரோத போதை பொருட்களை கொடுத்து வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு உறுதியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி, 12 மாத காலம் சமூக பணியாற்ற உத்தரவிடப்பட்டது. தவிர, 20 நாட்கள் மறுவாழ்வை பூர்த்தி செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
குவிக்லிக்கு 12 மாத கால மனநல சிகிச்சையும் தேவை என அனுமதி அளிக்கப்பட்டது. வழக்கின் துப்பறியும் ஆய்வாளர் டோனி மீகின்ஸ் கூறும்போது, லிண்டி மற்றும் குவிக்லி இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினோம். அதில், லிண்டி குற்றச்சாட்டுகளை மறுத்தபோதும், அவர் குற்றவாளி என விசாரணையில் இருந்து தெரிய வருகிறது என்றார்.
லிண்டி, காப்பகத்தில் உள்ள டீன்-ஏஜ் சிறுவனிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உல்லாசத்துடன் இருந்திருக்கிறார் என்றும், குவிக்லி மற்றவர்களுக்கு போதை பொருட்களை கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார்.