ஆளே மாறிய ரோஹித்… 10 கிலோவை கரைத்துவிட்டார் – அப்போ World Cup உறுதி!

Rohit Sharma Weight Loss: கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி முதல்முறையாக 1983ஆம் ஆண்டில் கைப்பற்றியது. தொடர்ந்து, 2002இல் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா, இலங்கை அணியுடன் சேர்ந்து பகிர்ந்துகொண்டது. 

Add Zee News as a Preferred Source

Rohit Sharma: தாகத்தை தீர்த்த ரோஹித் சர்மா

அதற்கு பின், 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து மூன்று ஐசிசி கோப்பைகளை இந்திய அணி தோனியின் தலைமையில் கைப்பற்றியது. அதற்கு பின் சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்தியாவின் ஐசிசி தாகம் தீர்ந்தது, தாகத்தை தீர்த்துவைத்தது ரோஹித் சர்மா. 

2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி அடுத்தடுத்து ஐசிசி கோப்பைகளை கைப்பற்றியிருந்தது. இதற்கு ரோஹித் சர்மா தலைமையில் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஐசிசி உலகக் கோப்பை ஆகிய இரு தொடரிலும் இறுதிப்போட்டி வரை வந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்ல தவறியது.

Rohit Sharma: 2027இல் விளையாடுவாரா ரோஹித் ?

கபில் தேவ், தோனியை அடுத்து ஐசிசி கோப்பையை வென்றவராக ரோஹித் சர்மா பார்க்கப்பட்டார். இவர் டி20ஐ மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இன்னும் அவர் ஓடிஐயில் மட்டும் விளையாடி வருகிறார். அவர்தான் ஓடிஐ அணியில் கேப்டன் ஆவார். 38 வயதான ரோஹித் சர்மா நிச்சயம் 2027 உலகக் கோப்பை வரை விளையாட மாட்டார் என பலரும் ஆருடம் சொல்லி வருகின்றனர். காரணம் அவர் ஃபிட்டாக இல்லை என்றும் சொல்கிறார்கள்.

Rohit Sharma Weight Loss: 10 கிலோவை குறைத்த ரோஹித் 

ஆனால் அவர்களின் வாயை அடைக்கும் வகையில் ரோஹித் சர்மா தற்போது சுமார் 10 கிலோ வரை குறைத்து ஃபிட்டாக தோற்றமளிக்கிறார். ஐபிஎல் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகள் ஏதும் இல்லாத நிலையில் அடுத்த அக்டோபரில்தான் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் 10 கிலோ குறைத்திருக்கும் சூழலில் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 

இந்தியாவின் முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ரோஹித் சர்மா உடன் சமீபத்தில் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், அதில்தான் ரோஹித் சர்மா 10 கிலோவை குறைத்தது குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.

Rohit Sharma Weight Loss: வெளியான முதல் புகைப்படம்

அபிஷேக் நாயர் போட்ட அந்த பதிவில், “10,000 கிராம் கழித்து… நாங்கள் இன்னும் செல்வோம்…” என குறிப்பிட்டுள்ளார். மேலும், அபிஷேக் நாயர் அந்த புகைப்படத்தில் ரோஹித் சர்மாவை கைக்காட்டியும்படி இருக்கும். அந்த வகையில், ரோஹித் சர்மா 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.