ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இத்தொடரில் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இப்போட்டியில் காயமடைந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Add Zee News as a Preferred Source
நேற்று முன்தினம் (செப்டம்பர் 26) இலங்கை அணியுடன் இந்திய அணி மோதியது. இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இப்போட்டியில் தான் அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா காயமடைந்தனர். அபிஷேக் சர்மா இலங்கைக்கு எதிராக 31 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 61 ரன்கள் குவித்தார். இதையடுத்து ஃபீல்டிங் செய்யும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
அதேபோல் ஆல் – ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் அசத்தினார். அவர் முதல் ஓவரை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ஆனால் இதையடுத்து அவர் காயமடைந்தார். அதன் காரணமாக மைத்தானத்தில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் விளையாடுவார்களா? என்ற கேள்வி ரசிகர்களின் மத்தில் எழுந்துள்ளது. இதற்கு இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தசைப்பிடிப்பின் காரணமாகவே மைதானத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் இருவரும் போட்டி நாள் அன்று பயிற்சியில் கலந்து கொள்வார்கள். அபிஷேக் சர்மாவை பொறுத்தவரையில் அவர் நல்ல உடற்தற்குதியுடன் இருக்கிறார்.ஹர்திக் பாண்டியா பயிற்சியின்போது அவர் எப்படி செயல்படுகிறார் என்பது பார்க்க விரும்புகிறோம். எனவே இருவருமே தற்போது நல்ல நிலைமையிலேயே இருக்கிறார்கள்.
ஆசிய கோப்பையின் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். இறுதி போட்டியிலும் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். இவர் கூறுவதை வைத்து பார்க்கையில் இருவரும் இன்றைய இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என தெரிகிறது. மேலும், ஆசிய கோப்பை இறுதி போட்டி வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக மோதுவதால், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
About the Author
R Balaji