ஆசிய கோப்பை தொடர் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்திய அணியே இப்போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இத்தொடரிலேயே ஏற்கனவே இரண்டு முறை பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தி உள்ளது. இதன் காரணமாகவே இந்திய அணி வெற்றி பெரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில், இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றன. ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் சர்மா இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்தனர். இதன் காரணமாக இவர்கள் இருவரும் இறுதி போட்டியில் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தொடக்க வீரராக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லே இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் சர்மா அபார ஃபார்மில் உள்ளார். ஒன் டவுனில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பின்னர் திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சில், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா அணிக்குள் வருவதால், அர்ஷ்தீப் சிங் கழட்டிவிடப்படுவார் என தெரிகிறது. மற்றபடி அணியில் ஏதும் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் முதல் முறையாக மோதுவதால், ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இரு அணிகளுக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் 11
இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.
பாகிஸ்தான் அணி: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.
About the Author
R Balaji