சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சர்வதேச போதை பொருள் கும்பலைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. இதில் போதைபொருள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். […]
