யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்

இணையதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக யூடியூப் உள்ளது. டிவி பார்க்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருவதற்கு யூடியூப் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூடியூப்பில் பயனர்களும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். இந்த வீடியோக்களில் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை வீடியோவை அப்லோடு செய்தவர்களுக்கும் வழங்குவது மூலமாக யூடியூப் பிரபலமாகியுள்ளது. இதனால் சமூக வலைத்தள பயனர்கள் மத்தியில் யூடியூப் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

வீடியோக்களை பார்க்கும் போது இடையிடையே விளம்பரங்கள் தோன்றுகின்றன. இந்த விளம்பரங்கள் பயனர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் உள்ளன. யூடியூப் பிரீமியம் சப்ஸ்கிரைப் செய்திருந்தால், விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை பார்க்கவும், பேக்கிரவுண்ட் பிளே ஆப்ஷனையும் பயன்படுத்தவும் முடியும். ஆனால் இதன் கட்டணம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், குறைந்த கட்டணத்துடன் கூடிய புதிய பிளானை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்கள் பார்க்கும் வசதி மட்டுமே கொண்ட பிரீமியம் லைட் என்ற பிளானை ரூ.89 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் யூடியூப் மியூசிக், பேக்கிரவுண்ட் பிளே போன்ற வசதிகள் கிடைக்காது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.