சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். இதற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிவாரணமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் ரூ.2 லட்சமும், முதல்வர் ரூ.10 லட்சமும் நிவாரண நிதி அறிவித்துள்ளார். சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. […]
