பரேலியில் திருமண மண்டபம் உட்பட பல சட்டவிரோத கட்டிடங்கள் இடிப்பு

பரேலி: உத்​தரபிரதேசம், கான்​பூர் மாவட்​டம் ராவத்​பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்​டிகை​யையொட்டி நடை​பெற்ற ஊர்​வலத்​தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்​கிய பேனர்​களை​யும் கொண்டு சென்​றனர். இதற்கு இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இது தொடர்​பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்​பினர் இடையே மோதல் ஏற்​பட்டு கலவர​மாக மாறியது.

இந்​நிலை​யில், பரேலி நகரில் டாக்​டர் நபீஸ் அகமதுக்கு சொந்​த​மான ராஸா பேலஸ் என்ற திரு​மணம் மண்​டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதி​காரி​கள் போலீ​ஸாரின் உதவி​யுடன் நேற்று இடித்​தனர். கட்​டு​மான விதி​கள் மீறப்​பட்​டுள்​ள​தால் அந்​தக் கட்​டிடத்தை இடித்​த​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

மேலும் பரேலி நகரில் ஆக்​கிரமித்து கட்​டப்​பட்​டிருந்த கடைகள் மற்​றும் வீடு​களின் ஒரு பகு​தியை அதி​காரி​கள் நேற்று இடித்​தனர். மேலும் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்​டுள்ள கட்​டிடங்​களை அடை​யாளம் காணும் பணி​யில் அதி​காரி​கள் ஈடு​பட்​டுள்​ளனர்.

இது​போல பர்​ஹத் என்​பவருக்கு சொந்​த​மான வீட்​டுக்கு அதி​காரி​கள் சீல் வைத்​தனர். சமீபத்​தில் நடந்த வன்​முறையைத் தூண்​டிய​தாக குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள தவு​கூர் ராஸா இந்த வீட்​டில்​தான் தங்கி இருந்​தார்.

இதனிடையே, தவு​கூர் ராஸாவுடன் தொடர்பு வைத்​திருப்​பவர்​கள் மற்​றும் அவருடைய சட்​ட​விரோத செயல்​களுக்கு நிதி​யுதவி வழங்​கு​வோரை அதி​காரி​கள் உன்​னிப்​பாக கவனித்​து வரு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.