ஸ்பெயின் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ஸ்​பெ​யினில் நடை​பெற்ற கார் பந்​த​யத்​தில் 3-வது இடம் பிடித்த நடிகர் அஜித்​கு​மார் அணிக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

ஸ்பெயினில் ஐரோப்பிய எண்​டூரன்ஸ் சாம்​பியன்​ஷிப் தொடர் கார் பந்​த​யத்​தில் அஜித் அணி ஒட்​டுமொத்​த​மாக 3-வது இடம் பிடித்து சாதனை படைத்​துள்​ளது. இதையொட்​டி, அவருக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் தனது சமூக வலைதள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: பார்​சிலோ​னா​வில் நடந்த 24 மணி நேர கார் பந்​த​யத்​தில் நடிகர் அஜித்​கு​மாரின் அணி ஒட்​டுமொத்​த​மாக 3-வது இடம் பிடித்​திருப்​பதை அறிந்து மகிழ்​கிறேன். இந்த வெற்​றி​யின் மூலம் உலக அளவில் கார் பந்​த​யத்​தில் இந்​தி​யா​வை​யும், தமிழகத்​தை​யும் பெரு​மையடைய செய்த நடிகர் அஜித்​கு​மாருக்​கும், அவரது குழு​வினருக்​கும் வாழ்த்​துகள்.

மேலும், இந்த சர்​வ​தேசப் போட்​டி​யின்​போது, கார், பந்தய உபகரணங்​கள், ஜெர்​சி​யில் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் இலச்​சினையை பயன்​படுத்​தி​யதற்​காக தமிழக அரசு சார்​பில் அவருக்​கும், அவரது குழு​வினருக்​கும் நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். அவரது அணி இன்​னும் பல வெற்​றிகளை குவிக்​கட்​டும்.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.