சென்னை; கரூரில் காட்டும் அக்கறை நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் இல்லையே ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி, சிறுநீரக முறைகேடு வழக்கு விசாரணையை இதுவரை விரைவுபடுத்தாதது திமுக அரசின் இரட்டை வேடம் என கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்குச் சொந்தமான தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியாா் மருத்துவமனையில் சிறுநீரக முறைகேடு நிகழ்ந்ததாக […]
