"தயவுசெய்து பரப்பாதீர்கள்; அவை AI புகைப்படங்கள்" – நடிகை பிரியங்கா மோகன் ட்வீட்

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் 2021-ல் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா மோகன், சமீபத்தில் வெளியான ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ‘They Call Him OG’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

பிரியங்கா மோகன் - Priyanka Mohan
பிரியங்கா மோகன் – Priyanka Mohan

இவ்வாறிருக்க, பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் என சில படங்கள் சமூக வலைத்தங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அவை AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள் என பிரியங்கா மோகன் மறுத்திருக்கிறார் .

பிரியங்கா மோகன் - Priyanka Mohan
பிரியங்கா மோகன் – Priyanka Mohan

இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரியங்கா மோகன், “என்னைத் தவறாக சித்தரிக்கும் வகையில் AI-யில் உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகின்றன.

தயவுசெய்து அந்தப் போலி புகைப்படங்களை ஷேர் செய்வதையோ, பரப்புவதையோ நிறுத்துங்கள்.

AI-யை படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தவறான செயல்களுக்கு அல்ல.

நாம் என்ன உருவாக்குகிறோம், என்ன ஷேர் செய்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம்” என்று தனது ட்வீட்டில் வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.