மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் 5 வீராங்கனைகளை தக்கவைக்க அனுமதி

மும்பை,

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகளுக்கான மெகா ஏலத்தை அடுத்த மாதம் 25 முதல் 29-ந்தேதிக்குள் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீராங்கனைகளை தக்கவைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவர்களில் 3 பேர் இந்தியர்களாக இருக்கலாம். தக்கவைக்கப்படும் வீராங்கனைகளில் முதலாவது நபருக்கு ரூ.3½ கோடி ஊதியமாக வழங்க வேண்டும். அடுத்த 4 வீராங்கனைகளுக்கு முறையே ரூ.2½ கோடி, ரூ.1¾ கோடி, ரூ.1 கோடி, ரூ.50 லட்சம் வீதம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் ஒரு அணி ரூ.15 கோடி வரை செலவிடலாம்.

இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலத்தை டிசம்பர் 13 முதல் 15-ந்தேதிக்குள் நடத்த கிரிக்கெட் வாரியம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.